Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமலின் ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (12:10 IST)
விமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய்  இசையமைத்துள்ளார். அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாகத்  தயாரிப்பில் இருந்த இந்தப் படம், ஒருவழியாக முடிந்து ரிலீஸிற்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார்  அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
 
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய  தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments