Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடம்பிடிக்கும் அஞ்சலி - மாட்டிக் கொண்ட மாப்பிள்ளை சிங்கம்

அடம்பிடிக்கும் அஞ்சலி - மாட்டிக் கொண்ட மாப்பிள்ளை சிங்கம்
, செவ்வாய், 7 ஜூலை 2015 (10:46 IST)
காணாமல் போன அஞ்சலியை தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்த படம், அப்பாடக்கர். அதனைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒப்பந்தமானார். விமல் ஹீரோ.
இந்த மாதம் மாப்பிள்ளை சிங்கம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. காரணம் கேட்டால் அஞ்சலி பக்கம் கை காட்டுகிறார்கள். அவர்தான் கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார், அதனால்தான் இந்த தாமதம் என்கிறார்கள். 
 
அஞ்சலியிடம் கேட்டால், 50 நாள் கால்ஷீட் தந்தேன். அதை வீணாக்கிவிட்டார்கள். இப்போது வேறு படங்களுக்கு கால்ஷீட் தந்திருக்கிறேன். இதில் என் தப்பு எதுவும் இல்லை என்கிறார். 
 
விரைவில் இந்தப் பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்க பஞ்சாயத்துக்கு வரவிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil