Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவனுக்குப் பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (10:39 IST)
மாதவனுக்குப் பதிலாக, அந்த கேரக்டரில் வில்லன் நடிகர் சோனு சூத் நடிக்கிறார். 
‘டெம்பர்’ தெலுங்குப் படம், ஹிந்தியில் ‘சிம்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ரோகித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஹீரோவாக  நடிக்க, சரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் தான் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை முடிந்து  ஓய்வில் இருக்கிறார் மாதவன். இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவரால் தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது. எனவே,  அவருக்குப் பதிலாக பிரபல வில்லன் நடிகர் சோனு சூத் அந்த கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் ‘சந்திரமுகி’, ‘ஒஸ்தி’ உள்ளிட்ட பல சில படங்களில்  நடித்திருக்கிறார் சோனு சூத்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments