Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விக்ரமன்

மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விக்ரமன்
, திங்கள், 8 ஜூன் 2015 (16:20 IST)
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக டைரக்டர் விக்ரமன், செயலாளராக டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக டைரக்டர் வி.சேகர், துணைத்தலைவர்களாக டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். 
 
இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி நடக்கிறது. விக்ரமன் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் அப்படியே இந்தமுறையும் அதே பதவிகளுக்காக தேர்தலில் நிற்கின்றனர்.
 
வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 23-ந்தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவு ஜூலை 5-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 
 
டைரக்டர்கள் சங்கத்தின் மொத்தம் 2 ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil