Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்க்கிங் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?

vinoth
செவ்வாய், 19 நவம்பர் 2024 (08:59 IST)
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங். இதனால் இந்த பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

இதையடுத்து அவரின் இரண்டாவது படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கானப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments