Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்

மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்
, வெள்ளி, 22 மே 2015 (15:16 IST)
10 எண்றதுக்குள்ள படத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது விஜய் மில்டனுக்கும், விக்ரமுக்கும் முட்டிக் கொண்டதாகவும் இருவரும் பரஸ்பர மனஸ்தாபத்தில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
 
அதனை விசாரித்த போது கிடைத்த தகவல் ஆச்சரியமானது.
 
யார் இந்த மாதிரி அடிப்படையே இல்லாத செய்திகளை சொல்வது என்று அலுத்துக் கொண்ட படக்குழுவினர், உண்மை என்னவென்றால், விஜய் மில்டன் விக்ரமிடம் இன்னொரு கதை கூறினார். அது விக்ரமுக்கு பிடித்ததால் உடனே கால்ஷீட் தந்திருக்கிறார்.
 
இரண்டு பேரும் மீண்டும் இணைந்து படம் செய்யவிருக்கிறார்கள். இந்நிலையில் சண்டை என்று சொல்வதெல்லாம் வடிகட்டிய பொய் என்றனர். ஆக, 10 எண்றதுக்குள்ள படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil