Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (13:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் சமீபத்தில் ரிலீஸாகி குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விக்ரம் வந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மறுபடியும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில் அதற்குள்ளாகவே படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை விற்பனை ஆகியுள்ளது. படத்தை தமிழ்நாட்டில் மகராஜா மற்றும் கருடன் ஆகிய படங்களை வெளியிட்ட பைவ்ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை மக்களே ரெடியா? ’கங்குவா’ இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

பிரிசன் பிரேக் வகைக் கதையா ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்க வாசல்’?

’நடிகைகளுக்குக் கல்யாணமே ஆகக் கூடாதுன்னு சிலர் ஆசைப்படுறாங்க’- கடுப்பான பிரியா பவானி சங்கர்!

பிதாமகன் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments