Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’… ஆக்‌ஷன் பிலடப் அறிமுக வீடியோ… முதலில் இரண்டாம் பாகம்!

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:48 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து நேற்று விக்ரம்மின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியானது. மளிகை கடை ஒன்றில் விக்ரம் இருக்க, அவரை வில்லன் கூட்டம் துரத்திவர அவர்களில் ஒருவரை சுட்டு மிரட்டி விக்ரம் மாஸ் வசனங்கள் பேசுவது போல இந்த வீடியோ உருவாகியுள்ளது. படத்துக்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் முதலில் இரண்டாம் பாகம் ரிலிஸாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!

கைதி 2 படத்தில் இணையும் அனுஷ்கா… எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

அடுத்த கட்டுரையில்
Show comments