தங்கலான் படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த தகவல்!

vinoth
திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:21 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்துக்கு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இப்போது இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கபடாமல் உள்ளது.

இந்நிலையில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் “தேர்தல் தேதி பிரித்து ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும்  முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம். இரண்டு மாதங்களுக்குள் படம் ரிலீஸாகிவிடும்” எனக் கூறியுள்ளார். அதனால் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படமும் மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படும் நிலையில் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments