பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் விக்ரம்மின் தங்கலான்… அயலான் படத்துக்கு சிக்கல்!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (07:37 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸை அறிவித்துள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments