தங்கலான் ரிலீஸ் தள்ளிவைப்பா?... ஜனவரி 25 ல் பா ரஞ்சித்தின் மற்றொரு படம் ரிலீஸ்!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (08:00 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதுவரை இந்த டீசரை ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் தங்கலான் திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என தெரிகிறது.

இந்நிலையில் ஜனவரி 25 ஆம் தேதி பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments