Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் வேட்டையைத் தொடங்கும் விக்ரம்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:39 IST)
விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள ‘சாமி 2’, செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங் போகிறது. 


 

 
ஹரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் ஏற்கெனவே வெளியான படம் ‘சாமி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அத்துடன், பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த விவேக்கிற்குப் பதில், இந்தப் பாகத்தில் சூரி நடிக்கிறார்.
 
செப்டம்பர் மாதம் தொடங்கும் படப்பிடிப்பை, ஜனவரியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு, டெல்லி, நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர், நைனிடால், காத்மாண்டு ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும், திருநெல்வேலி, பழனி, சிவகாசி மற்றும் கேரளா ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளது. அத்துடன், மிசெளரி மற்றும் சில வெளிநாடுகளில் பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments