Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருட்டு

நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் வைர மோதிரம் திருட்டு

நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருட்டு
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (12:08 IST)
நடிகர் விக்ரமின், மகள் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருடு போய்விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



பிரபலமான நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா (வயது 22). சமீபத்தில்  முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

இதை அடுத்து அக்ஷிதா நேற்று மாலை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட சென்றிருந்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து பார்த்த போது, எனது கையில் அணிந்து இருந்த வைர மோதிரத்தை காணவில்லை. யாரோ நைசாக திருடி சென்றுவிட்டனர். மோதிரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் திருட்டு போன வைர மோதிரத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆயிரம் விளக்கு போலீசார் அக்ஷிதா கொடுத்த புகார் மனு தொடர்பாக நேற்று இரவு வழக்குப்பதிவு செய்து மோதிரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நமது திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் (வீடியோ)