விக்ரமின் கோப்ரா பட டீசர் நாளை ரிலீஸ் !இயக்குநர் டுவீட்... ரசிகர்கள் உற்சாகம் !

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:46 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும்  கோப்ரா படத்தில் டீசர் நாளை காலை 10 :32 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடம் விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

இதனைத்தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9 ஆம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற அறிவிப்பு செய்தனர்.

அதேபோல் நாளை ( 09-01-21 ) காலை 10:32 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும்  எனப்க் கோப்ரா படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் தும்பி பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது . இப்படத்தின் டீசரும் சாதனை படைக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

அடுத்த கட்டுரையில்