Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரமின் நெகிழ்ச்சி அறிக்கை

விக்ரமின் நெகிழ்ச்சி அறிக்கை

விக்ரமின் நெகிழ்ச்சி அறிக்கை
, திங்கள், 25 ஏப்ரல் 2016 (17:07 IST)
சென்னை வெள்ளத்திலிருந்து மக்கள் உடனடியாக மீள்வதற்கு மனிதநேயமே பிரதான காரணம். சென்னை மக்களின் தன்னம்பிக்கையை, உதவும் குணத்தை பிரதானப்படுத்தி பாடல் ஒன்றை விக்ரம் உருவாக்கினார்.


 

 
அபிஷேக் பச்சன், நயன்தாரா உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளனர். 
 
SPIRIT OF CHENNAI என்ற பெயரில் தயாரான இந்தப் பாடலை நேற்று விக்ரம் வெளியிட்டார். அதனையொட்டி அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
 
"உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த மழை.
 
இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல, மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது.
 
வெள்ளத்திற்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள். சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது.
 
உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர் தானா என்ற கேள்வி என்னுள் வந்தது.
 
எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல் உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக நான் பார்த்தேன். மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது." - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil