Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி ரிலீஸ் ரேஸில் இணையும் விக்ரம் & மணிரத்னத்தின் ராவணன்!

vinoth
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:40 IST)
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், பிரித்விராஜ், ஐஸ்வர்யாராய்,பிரபு மற்றும் கார்த்தி ஆகியோர் நடிப்பில் 2010  ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ராவணன்.  தமிழ், இந்தி இரு மொழிகளிலும் உருவான இந்த படத்தில் இந்தியில் வில்லன் வேடத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. இதனால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் இரண்டு மொழிகளிலும் படம் தோல்வி படமாக அமைந்தது.

இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து இப்போது ராவணன் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி இந்த படம் சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ரி ரிலீஸ் ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments