Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவுடன் மோதலை தவிர்க்கும் விக்ரம் பிரபு!!

சூர்யாவுடன் மோதலை தவிர்க்கும் விக்ரம் பிரபு!!
, ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (11:45 IST)
விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வீர சிவாஜி'. 


 
 
கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
 
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சூர்யாவின் 'எஸ்3' உட்பட பல்வேறு பெரிய படங்கள் அன்றைய தினத்தில் வெளியாவதால் தற்போது வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்துள்ளனர்.
 
அதன்படி டிசம்பர் 16-ம் தேதி 'வீர சிவாஜி' வெளியாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போகன் - டிரைலர்