Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து ஹிட்களின் ஆனந்தத்துடன் கேக் வெட்டிய விக்ரம் பிரபு

ஐந்து ஹிட்களின் ஆனந்தத்துடன் கேக் வெட்டிய விக்ரம் பிரபு
, சனி, 17 ஜனவரி 2015 (09:31 IST)
சமீபத்தில் எந்தவொரு நடிகரும் தொடர்ந்து ஐந்து ஹிட்கள் தரவில்லை. அதுவும் ஒரு புதுமுக நடிகர்? வாய்ப்பேயில்லை. ஆனால், விக்ரம் பிரபு விதிவிலக்கு.
 
கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு சரியான கதைகளை தேர்வு செய்து குறுகிய காலத்தில் ஐந்து படங்கள் நடித்தார். கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு மற்றும் வெள்ளக்காரதுரை. ஐந்தும் வெற்றி.


 
கடைசியாக வெளியான வெள்ளக்காரதுரை காமெடிப் படம். விக்ரம் பிரபு காமெடி படத்தில் நடிப்பது அதுவே முதல்முறை. டிசம்பர் 25 வெளியான ஐந்து படங்களில் வெள்ளக்காரதுரைதான் டாப். 
 
இந்த மகிழ்ச்சியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்ரம் பிரபு.
 
இந்த வருடம் அவர் விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம், தலப்பாகட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil