விக்ரம் பிரபுவின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (17:47 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, பிரபு சாலமன் இயக்கிய ’கும்கி’ என்ற திரைப்படத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அரிமா நம்பி, வெள்ளைக்கார துரை, வீரசிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’பாயும் புலி நீ எனக்கு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் என்பவர் இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு ’டாணாக்காரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தை எஸ்ஆர் பிரகாஷ் பாபு என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments