இப்ப நம்ம ஆரம்பிக்கலாமா?.... விக்ரம் பட முன்பதிவு குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 28 மே 2022 (09:28 IST)
விக்ரம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்தியாவின் பல நகரங்களுக்கும், துபாய் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று கமல் படத்துக்கான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு மே 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments