Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோதலில் விக்ரம் – சிவகார்த்திகேயன்

மோதலில் விக்ரம் – சிவகார்த்திகேயன்
, செவ்வாய், 4 ஜூலை 2017 (13:26 IST)
ஆயுத பூஜை விடுமுறையில், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ – விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ இரண்டு படங்களும் மோதுகின்றன.
 



 

விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இதில், ‘ஸ்கெட்ச்’ படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்தை, ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம், ஆயுத பூஜைக்கு ரிலீஸாவதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமும், சிவகார்த்திகேயனும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவனா வழக்கு - திலீப், காவ்யா மாதவன் தலைமறைவு