Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை வழியை பின்பற்றும் துருவ் விக்ரம் – கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக செய்த கடும் உழைப்பு!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:51 IST)
விக்ரம்மின் 60 ஆவது படத்துக்காக அவரும் மகன் துருவ் விக்ரம்மும் சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி வருவதாக சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு கிளம்ப படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் 

விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், முக்கிய வேடங்களில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவருமே சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி வருவதாக சொல்லப்படுகிறது. விக்ரம் கதாபாத்திரங்களுக்காக தன் உடலமைப்பை மாற்றி நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இப்போது துருவ் விக்ரமும் இணைந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments