Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிசையாக வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (15:38 IST)
தொடர்ந்து சிக்கலில்லாமல் படங்கள் தந்து கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் சரியாகப் போகாததால், விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டது. முக்கியமாக இடம் பொருள் ஏவல்.
 
எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் என்ற பெயரில் படமாக்கினார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு. படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் விற்பனையாகவில்லை. உத்தம வில்லன் திருப்பதி பிரதர்ஸை முழுவதுமாக புரட்டிப்போட இடம் பொருள் ஏவலின் நிலை கேள்விக்குறியானது.
 
சமீபத்திய தகவல், பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அன்பு செழியன் படத்தை வெளியிட முன் வந்திருக்கிறார். செப்டம்பரில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
விஜய் சேதுபதி நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் இன்று வெளியாகியுள்ளது. செப்டம்பரில் இடம் பொருள் ஏவல். அக்டோபரில் மெல்லிசை. நவம்பரில் நானும் ரௌடிதான். 
 
நயன்தாராவுடன் நடித்துள்ள நானும் ரௌடிதான் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அப்படம் மேலே உள்ள படங்களை முந்திக் கொண்டு வெளியாகவும் வாய்ப்புள்ளது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments