Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடம் பொருள் ஏவல் - பேச்சைக் குறைத்த விஜய் சேதுபதி

இடம் பொருள் ஏவல் - பேச்சைக் குறைத்த விஜய் சேதுபதி
, வியாழன், 30 அக்டோபர் 2014 (14:33 IST)
சீனு ராமசாமியின் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
 
விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்த இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பித்தது. பிறகு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கினர்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை விஜய் சேதுபதிக்கு குறைவான வசனங்களே உள்ளன. பெரும்பாலும் தனது உணர்வுகளை முக்கதில் காட்டிவிடும் கதாபாத்திரமாம் அவருக்கு. இது விஜய் சேதுபதி இதுவரை நடித்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
 
யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இவர்கள் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil