Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டைக்காரர் விஜய் - கசிந்த புலி ஸ்டில்

வேட்டைக்காரர் விஜய் - கசிந்த புலி ஸ்டில்
, புதன், 22 ஏப்ரல் 2015 (09:16 IST)
புலி என்ன கதை? விஜய்க்கு புலியில் என்ன மாதிரியான வேடம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை சிதம்பர ரகசியமாக பாதுகாக்கிறது படக்குழு. இந்நிலையில் படத்தின் ஸ்டில் ஒன்று வெளியாகியிருப்பது படம் சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
சமீபத்தில் விஜய் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் படத்தை, விஜய்யின் புலி கெட்டப் என்ற பெயரில் வெளியிட்டனர். அந்த ஸ்டில்லிலிருந்து எதையும் ரசிகர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
 
இந்நிலையில் விஜய் வேட்டைக்காரன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியிருக்கிறது. புலியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அசத்த புலி யூனிட் திட்டமிட்டிருந்த நிலையில் திருட்டுத்தனமாக புலி புகைப்படம் வெளியாகியிருப்பது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil