கோட் படத்தை பார்த்த விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்!

vinoth
வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:50 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் கனெக்ட்டாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெறும் சி எஸ் கே சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்தன. ஆனால் மற்ற மாநில மொழி ரசிகர்கள் இதை ரசிக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தில் சி எஸ் கே ரெஃபரன்ஸ் இருப்பதால் வெளிமாநில ரசிகர்களுக்குப் படம் பிடிக்கவில்லை போல. நான் சி எஸ் கே அணிக்கு சாதகமாகக் காட்சிகள் வைத்திருப்பதால் மும்பை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள். இந்நிலையில்  விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியன் தன்னுடைய அடுத்த பட இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரோடு இணைந்து கோட் படத்தை தேனியில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments