Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினு சக்ரவர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் - விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல்

வினு சக்ரவர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் - விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல்
, சனி, 1 ஆகஸ்ட் 2015 (20:04 IST)
நடிகர் வினு சக்ரவர்த்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
 
நடிகர் வினு சக்ரவர்த்தி உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக நினைவிழந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது. 
 
இந்நிலையில் விஜயகாந்த் வினு சக்ரவர்த்தியை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். வினு சக்ரவர்த்தி உடல்நிலை தேறி விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil