Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தில் அப்பாவின் காட்சியைப் பார்த்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.. விஜயகாந்த் மகன் மகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:25 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன.

அதில் ஒன்றுதான் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் இடம்பெற்றது. படத்தின் தொடக்கக் காட்சியிலேயே விஜய் அவரைப் போல தோன்றும் இடத்தில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதுபற்றி பேசியுள்ள விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் “நான் இன்னும் கோட் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் படத்தில் அப்பா வரும் காட்சியை எனக்கு சிலர் அனுப்பி வைத்தார்கள்.  மக்கள் அந்த காட்சியை தியேட்டரில் பார்க்கும் போது புல்லரிக்கிறது.” என அரசுப்பள்ளி ஒன்றில் நலத்திட்ட உதவி செய்யும் போது பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments