Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் சிகரெட்டுடன் விஜய்…. ‘’நா ரெடி’’ லியோ பட முதல் சிங்கில் பற்றிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (17:10 IST)
லியோ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் விஜய்   மற்றும் லோகேஷ் கனகராஜ் தங்கள்  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் லியோ.

தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள இப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்து வரும் நிலையில்,   இப்படம் வெளியீட்டிற்கு முன்பே  இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ. 350 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் லியோ படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன்  கேள்வி எழுப்பி வந்தனர். எனவே அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கில் ''நா ரெடி''  என்ற பாடல்  வெளியாகும் என்று நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்கள்   டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, லியோ படத்தின் புதிய போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. 

வாயில் சிகரெட்டுடன்  நடிகர் விஜய் நடனம் ஆடுவது போன்ற இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. அனிருத்தின் இசை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments