Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தின் வேலைக்காக அமெரிக்கா சென்ற விஜய்!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் அமெரிக்காவில் சென்று பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது விஜய்யும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதால் அந்த காட்சிகளை தத்ரூபமாக உருவாக்குவதற்காக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளார்களாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments