Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துக்கு நன்றி செலுத்த ஆசைப்படும் விஜய்… கோட் படத்தில் கேப்டன் கேமியோ!

vinoth
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:13 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த மூத்த நடிகர் விஜயகாந்துக்கு தன்னுடைய கோட் படத்தில் அஞ்சலி செலுத்த விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஏ ஐ தொழில் நுட்பம் மூலமாக விஜயகாந்தின் சிறப்பு தோற்றம்  இடம்பெற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். இது சம்மந்தமாக விஜயகாந்த் குடும்பத்தினரிடம் விரைவில் படக்குழு அனுமதி கேட்டு பேச உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments