Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் & விஜய் படத்தின் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:23 IST)
வெற்றிமாறன் மற்றும் விஜய் கூட்டணி நீண்ட நாட்களாகவே இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து நாவல்களைப் படமாக்குவதை தனது பாணியாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் இப்போது தமிழ் சினிமாவில் நாவல்களுக்கு ஒரு டிமாண்ட் உருவாகியுள்ளது. இப்போது அவர் ஜெயமோகனின் துணைவன் கதையை விடுதலை என்ற பெயரில் படமாக்கி வருகிறார். அடுத்து சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படமாக்க உள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நீலிமா கோட்டா எழுதியுள்ள தி ஷூஸ் ஆஃப் தி டெட் (இறந்தவர்களின் காலணி) என்ற நாவலின் உரிமத்தைப் பெற்றுள்ளாராம். இதைதான் அவர் விஜய்யை வைத்து படமாக இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகும் இந்த நாவலை விஜய்யிடம் சொல்லி அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது இயக்கி வரும் விடுதலை மற்றும் அடுத்து வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கிவிட்டு இந்த படத்தைதான் அவர் தொடங்க உள்ளாராம். இந்த படத்துக்கு வெற்றிமாறனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சில மாதங்கள் அவர் களப்பணி ஆற்றவும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments