Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்- வெங்கட்பிரபு படத்தின் டைட்டில் இதுவா?... சமூகவலைதளத்தில் பரவும் தகவல்!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:54 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த படத்தின் டைட்டில் “பாஸ்” என்று வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் ஒரு அதிகாரப்பூர்வ தகவல் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.

இந்த படத்துக்கு ஒரு ஆங்கில சொல்தான் தலைப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் படம் பேன் இந்தியன் ரிலீஸாக வெளிவர உள்ளதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் புரியும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கில தலைப்பை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments