Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா படத்தில் முக்கிய வேடம் ஏற்கும் விஜய்வசந்த்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (20:18 IST)
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும்  நடிகை நயன்தாரா தற்போது 'டோரா', 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', மற்றும் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்



இவற்றில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார்

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்வசந்த் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'அச்சமின்றி' படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் நண்பனாக நடிக்கின்றார். விஜய் வசந்த்துக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனில் ‘நான் ஆணையிட்டால்’ ரீமேக் பாடல்? எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுக்கும் விஜய்!?

வெண்னிற கௌனில் கலக்கலான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

ஜெயம் ரவி & கணேஷ் கே பாபு இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்து வெளியான அப்டேட்!

தனுஷ் - நயன்தாரா வழக்கு: நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments