லஸ்ட் ஸ்டோரிஸுக்கு பின்னர் எங்கள் காதல் மலர்ந்தது- தமன்னாவின் காதலர் விஜய் வர்மா!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2024 (18:15 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

இதில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வில் நடித்த போது சக நடிகரான விஜய் வர்மாவைக் காதலிக்க தொடங்கினார். இருவரும் தற்போது பாலிவுட்டின் முன்னணி காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்நிலையில் தமன்னாவிடம் காதலை வெளிப்படுத்தியது குறித்து பேசிய விஜய் வர்மா “லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரின் பின்னான ஒரு விருந்தில் அவரிடம் என் காதலை தெரிவித்தேன். நான் 2005 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் இருந்து கிளம்பி மும்பைக்கு வந்தேன். அவர் அதேயாண்டுதான் மும்பையில் இருந்து ஐதராபாத்த்துக்கு வந்து செட்டில் ஆனார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் எல்லாம் சரளமாக பேசுகிறார். திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு, அது ஒன்றும் விருந்தில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments