Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் நடிகரின் காதலுக்கு உதவும் விஜய் தேவரகொண்டா

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (23:56 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானிசங்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த புகைப்படத்தை ஹரிஷ் கல்யான் தனது டுவிட்டரில் பதிவு செய்து அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்வார்கள் என்று எண்ணி கமெண்ட் பகுதியை தடை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹரிஷ் கல்யாணின் இந்த டுவிட்டுக்கு ‘லாக்டவுன் வரை பொறுக்க முடியாதா? என்று பிரியா பவானிசங்கர் பதிலளித்து அவரும் கமெண்ட்டை தடை செய்துள்ளார். ஏற்கனவே பிரியா பவானி சங்கர் ஒருவரை காதலித்து வருவதாக கூறி வந்த நிலையில் தற்போது ஹரிஷூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இது Pelli Choopulu’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவல் கசிந்த நிலையில், இப்படம் குறித்த அறிவிப்புகள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இப்படத்தின்  டைட்டில் விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹரிஸ் கல்யான் ஹீரோவாகவும் பிரியா பவானி ஹீரோயினாகவும் நடிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments