Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் நிறைவடைந்த விஜய்யின் கோட் படப்பிடிப்பு… அமெரிக்கா பறந்த வெங்கட் பிரபு!

vinoth
திங்கள், 13 மே 2024 (06:54 IST)
அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்று வந்தது படக்குழு.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு துபாய் சென்ற நிலையில் இப்போது அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கிராபிக்ஸ் பணிகளை மேற்பார்வையிட இயக்குனர் வெங்கட்பிரபு அமெரிக்காவுக்கு சென்றுள்ளாராம். சென்னையில் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments