Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது? இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 27 ஏப்ரல் 2024 (11:05 IST)
அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்தில் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற பாடல் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பாடல் பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

இந்நிலையில் கோட் படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். அதில் “ஜூன் மாதம்” எனத் தெரிவித்துள்ளார். அனேகமாக ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments