Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேனில் மட்டுமா ஏறினார் விஜய்? ரசிகர்களின் நெஞ்சிலும் ஏறிவிட்டார்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (06:51 IST)
வேனில் மட்டுமா ஏறினார் விஜய்? ரசிகர்களின் நெஞ்சிலும் ஏறிவிட்டார்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே. வருமான வரி ரெய்டுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்யை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நேற்று விஜய் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தன்னை பார்ப்பதாக கூடி வந்ததை பார்த்து உற்சாகம் அடைந்தார். உடனே அங்கிருந்த வேன் ஒன்றின் மேல் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அதுமட்டுமின்றி ரசிகர்களை நோக்கி செல்பி எடுத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்
 
விஜய் வேனில் ஏறியது மட்டுமன்றி ரசிகர்களின் மனதிலும் ஏறி விட்டார் என்பது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதோடு, விஜய் எடுத்த செல்பி புகைப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்