Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தில் ரசிகர்களுக்காக விஜய் கொடுத்துள்ள டபுள் ட்ரீட்!

vinoth
செவ்வாய், 28 மே 2024 (07:28 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் டி ஏஜிங் பணிகளுக்காக வெங்கட்பிரபு மற்றும் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்று திரும்பினர். இந்தவாரத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்தால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து விசில் போடு என்ற பாடல் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் கோட் படத்தில் இன்னொரு பாடலையும் விஜய் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதுவரை எந்தவொரு படத்திலும் இரண்டு பாடல்களை விஜய் பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

அடுத்த கட்டுரையில்
Show comments