விஜய் சேதுபதியா இப்படி செய்தது? பைக் சீக்ரெட் இதோ...

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:45 IST)
கடந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை எடுத்தால் அதில் முதல் இடம் பிடிக்கும் படமாக '96' திரைப்படம் இருக்கும். ஆம், நடிகர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான வெற்றிப்படம் 96. 
 
காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் இந்த படம் கவர்ந்தது. 96 படத்தின் 100வது நாள் விழா நேற்று  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். 
 
இந்நிலையில், 96 திரைப்பட இயக்குனர் பிரேம் குமாருக்கு, விஜய் சேதுபதி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியானலும்,  அனைவராலும் பாராட்டப்பட்ட படம் 96. விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் 96 திரைப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம். 
 
பிரேம் குமாருக்கு கிளாசிக் பைக்குகள் மீது அதிஅக் ஆர்வம் என்பதால், விஜய் சேதுபதி அவருக்கு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை பரிசளித்துள்ளார். 
 
விஜய் சேதுபதியே பைக்கை ஓட்டி வந்து பிரேம் குமாருக்கு பரிசாக அளித்துள்ளார். இதில், ஸ்பெஷல் என்னவெனில் பைக்கின் பதிவு எண் '0096'. அதாவது 96 படத்தின் பெயரை நினைவுபடுத்தும் வகையில்தான், இந்த பதிவு எண் வாங்கப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments