Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (12:52 IST)
விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் டிசம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் வன்மம் படம் தயாராகியும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான ஆரஞ்சு மிட்டாயின் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கியுள்ளனர். 
 
பைஜு விஸ்வநாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் சேதுபதியே வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பும் அவரே. விஜய் சேதுபதியுடன் அஷ்ரிதா ஷெட்டி, ரமேஷ் திலக் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
 
படத்தை டிசம்பரில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments