75 நாளில் அடியெடுத்து வைத்த விஜய் சேதுபதியின் '96'!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:25 IST)
வெற்றிகரமாக 75வது நாளில் அடியெடுத்து வைத்த காதல் காவியத்தின் படைப்பான விஜய்சேதுபதியின் 96. 


 
 
நடிகர் விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 96. பள்ளி வயது காதலை உணர்வுப்பூர்வமாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இதனை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். அதில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க உணர்வுக் குவியலுடன் மெலிதான சோகத்துடன் பார்ப்பவர்களை சீண்டி எடுத்த 96, பார்வையாளர்களின் கண்களை வியர்க்கச் செய்ய தவறவில்லை. 
 
படத்தின் மிகப்பெரும் பக்கபலமாக இருந்தவை இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவின் பின்னணி இசையும், பாடல்களும் தான் . 
 
இந்நிலையில் இன்றுடன் 96 திரைப்படம் வெளியாகி 75-வது நாளைக் கடந்திருப்பதாக படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி எப்படி இருக்கு? ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய விமர்சனம்

Jananayagan: ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. தளபதி கச்சேரி சும்மா தெறி!...

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments