Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுதோல்வி அடைந்த விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர்

Webdunia
வியாழன், 25 மே 2023 (11:11 IST)
தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு விடுதலை வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  திரைப்படம் மே 12 ஆம் தேதி இன்று ரிலீஸானது.

வழக்கம் போல இந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் படம் மோசம் என்றும் ரசிகர்கள் கூறவில்லை. ஒருமுறை பார்க்கும் படமாக உருவாகியுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. படத்தின் கதை சிறப்பாக இருந்தும், திரைக்கதை சரியாக இல்லாததால்  படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு மோசமான வசூல் நிலவரமே உலகளவில் இருக்கிறது. இந்த படத்தின் வசூல் கலெக்‌ஷன் ஒரு கோடி ரூபாயைக் கூட தொடவில்லை என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடித்தும் படத்துக்கு இந்த நிலைமைதான் என்பது நம்ப முடியாத எதார்த்தமாக அமைந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!

உறுதியான அட்லி & அல்லு அர்ஜுன் படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லெனின் பாரதி!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் அந்த வித்தியாசமான முயற்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments