தனக்கு டப்பிங் கொடுத்த கலைஞரை அழைத்து முத்தமிட்ட விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (08:14 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பார்ஸி வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

இதையடுத்து இயக்குனர்கள் ராஜ் &டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ஸி வெப் சீரிஸில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது பார்ஸி சீரிஸ் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்த சீரிஸில் தமிழ் டப்பிங்கில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் குரல் கொடுத்திருந்தார் திருச்சி சரவணக்குமார். ஆனால் விஜய் சேதுபதியே பேசியது போல இருப்பதாக அவருக்கு பாராட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை அழைத்து வாழ்த்தியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அவருக்கு வாழ்த்தாக “உன்னை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி உன்னுடைய டப்பிங் பர்சி தொடரில் மிக அருமை. வாழ்க நீ. உன்னுடைய அறிவும் பண்பும் திறமையும் உன்னை மேன்மேலும் வளர்க்கும். நீ நினைக்கும் இடத்தை அடைவாய் வாழ்த்துக்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments