Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியோடு முதல் முறையாக இணையும் வடிவேலு… இயக்குனர் இவர்தான்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:00 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக பல படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதையடுத்து இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரிலீஸாக, அடுத்தடுத்து மற்ற படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து தான் நடிக்க உள்ள படம் பற்றி வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்த வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “அடுத்து விஜய் சேதுபதியோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக” கூறினார்.

இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுகக்குமார் இயக்கி, தயாரிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் தொகுப்பு!

ரசிகர்களைக் கவர தவறியதா ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’?

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் ‘எம் குமரன்S/O மகாலட்சுமி’ பட ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – ஜோதிகா தடாலடி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments