என் படங்களை நானே பார்ப்பது இல்லை- விஜய் சேதுபதி தடாலடி பதில்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:37 IST)
சமீபகாலமாக விஜய் சேதுபதி கதைத்தேர்வில் அக்கறை செலுத்தாமல் வலுவர்ற கதைகளில் நடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.

இந்நிலையில் இனிமேல் தனது படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பும் விஜய் சேதுபதி, தன்னுடைய நடிப்பை மெருகேற்றும் விதமாக இரண்டு நடிப்புப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னுடைய படங்களை நானே பார்ப்பதில்லை. ஏனென்றால் என்னுடைய நடிப்பு எனக்கே பிடிக்காது. மாஸ்டர் படத்தை பார்க்க சென்ற போது கூட முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments