Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி ரிலீஸ் ஆன விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்… எங்கு தெரியுமா?

vinoth
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:24 IST)
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற அவரின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. படத்தின் தெலுங்கு டப்பிங் தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹாவில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இந்த வாரம் தெலுங்கு சினிமாவில் பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் 400க்கும் மேற்பட்ட திரைகளில் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ரிலீஸாகியுள்ளது. சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தை ரி ரிலீஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments