Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (08:57 IST)
96 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி  உள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில்,10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.  
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் இன்று வெளியாகிறது. 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் 96 படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இதேபோல நீங்களும் உங்களுடைய 10-ம் வகுப்புப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் வேண்டுகோள் விடுத்துள்ளார்,  
 
இதனிடையே தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் யார் விஜய் சேதுபதி என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது, 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments