பள்ளியில் விஜய் சேதுபதியின் ஒன் சைட் லவ்… ஷாருக் கானின் பதில்!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:28 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அதில் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஷாருக் கான் பற்றி பேசும் போது “நான் பள்ளி படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். ஆனால் அந்த பெண் ஷாருக் கானை காதலித்தது. அதற்குப் பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. ஒருவழியா இந்த படத்தில் பழிவாங்கி விட்டேன்” எனப் பேசினார்.

இதற்கடுத்து பேசிய ஷாருக் கான் “விஜய் சேதுபதி என்னை பழிவாங்கி இருக்கலாம். ஆனால் என்னிடம் இருந்து என் ரசிகைகளைப் பிரிக்க முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments